பொதுமக்களுக்கு 2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து எச்சரிக்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.