இலங்கை
நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு?
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அழைப்பாளர், பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீர் விநியோகம் தடைப்படலாம் எனவும், இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.