ஆன்மிகம்

நாளை உதயமாகவுள்ள 2024 ஆம் ஆண்டை வரவேற்கும் முறை

நாளைய தினம் உதயமாகவுள்ள 2024 வருடப்பிறப்பை வரவேற்கும் முன்னதாக 2023 ஆம் ஆண்டை இனிதாக விடை கொடுக்க வேண்டும்.

இவ்வாண்டில் கிடைக்கப்பெற்ற விடயங்களுக்கும் கிடைக்காமலான விடயங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

2024ம் ஆண்டிற்கான காலண்டர் வாங்குவதற்க முன் அதில் வேறு எந்த நிறுவனத்தின் பெயரோ எதுவும் இல்லாததாக பார்த்து வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.

மகாலட்சுமி, வாராகி அம்மன் படத்துடன் இருக்கும் காலண்டரை வாங்கி வீட்டில் வைப்பது நல்லது.

இது தவிர புத்தாண்டு நாளன்று என்ன மாதிரி விஷயங்களை செய்தால் வரப் போகும் ஆண்டு சூப்பரான ஆண்டாக நமக்கு அமையும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.​

புத்தாண்டு பூஜை
ஒவ்வொரு ஆண்டு ஆங்கில புத்தாண்டோ, தமிழ் புத்தாண்டோ எதுவாக இருந்தாலும் சரி, பிறக்க போகும் புதிய ஆண்டு சூப்பராக இருக்க வேண்டும். இந்த ஆண்டிலாவது நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் அல்லது நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுண்டு.

ஆண்டு முழுவதும் நல்ல படியாக அமைய புத்தாண்டு அன்று நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் ரொம்ப முக்கியம்.

இதனால் புதிய ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியம், சந்தோஷம், செல்வ வளம் நிறைந்த ஆண்டாக அமையும்.

குளிக்கும் போது செய்ய வேண்டியவை
புத்தாண்டு அன்று எப்படியும் காலையில் எழுந்த உடனேயே குளித்து விடுவோம்.

அப்படி நாம் குளிப்பதற்கு முன், குளிக்கின்ற நீரில் 3 முக்கியமான பொருட்களை சேர்ப்பது மிகவும் நல்லது.

அந்த தண்ணீரில் முதலில் சிறிது கல் உப்பை சேர்க்க வேண்டும்.

கல் உப்பு, நமக்கு இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அகற்றி விடும்.

அடுத்ததாக சிறிது மஞ்சள் தூளை அதில் சேர்க்க வேண்டும். இதுவும் எதிர்மறை ஆற்றல்களை நீங்கி, வாழ்வில் மங்கலங்களை நிறைய செய்யும்.

மூன்றாவது சிறிது சுத்தமான பாலை சேர்க்க வேண்டும்.

அது பசும் பாலாக இருப்பது மிகவும் சிறப்பானது. இவை மூன்றுமே மகாலட்சுமியின் அம்சமானவை என்பதால் இவற்றை நீரில் கலந்து குளித்தால் அந்த ஆண்டு முழுவதும் மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு நிறைந்திருக்கும்.

விளக்கு ஏற்றும் முறை
அடுத்ததாக புத்தாண்டு அன்று காலையில் வீட்டின் வாசலில் சிறிதளவு மஞ்சள் தடவி அதன் மீது அரிசி மாவில் கோலமிட வேண்டும்.

அதன் மீது ஒரு அகலில், மஞ்சள் நிற திரி இட்டு, நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டிற்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அன்னாச்சிப்பூ நறுமணம் கொண்ட ஊதுபத்தியை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

பிறக்க போகும் 2024ம் ஆண்டு 8ம் இடத்தில் சனியின் ஆதிக்கத்துடன் பிறப்பதால் இந்த ஆண்டில் வராஹி அம்மனை வழிபடுவது சிறப்பானது. இதனால் வெற்றிகளும், மகிழ்ச்சிகளும் கூடும்.​

புத்தாண்டில் வாங்க வேண்டிய பொருள்
அதே போல் புத்தாண்டு அன்று இரவு 9 மணிக்குள் சில முக்கியமான பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபடுவதால் வீட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும்.

இந்த ஆண்டு புத்தாண்டு, திங்கட்கிழமையில் பிறக்கிறது.

அன்று ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரம் நேரம் பார்த்து புதிதாக தேங்காய் ஒன்றை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

அதன் பிறகு அதை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேங்காய் மங்கலத்தின் அடையாளமாக கருதப்படுவது.

இந்த பொருளை வீட்டில் வாங்கி வைப்பது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் தரும் பொருட்கள்
அதோடு மயிலிறகை தேவஸ்தான கடைகளில் போய் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைக்கலாம்.

முருகப் பெருமானின் வாகனமாக இருக்கக் கூடிய மயிலின் இறகை வீட்டில் வைப்பதால் நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.

அடுத்ததாக ரூ.10 க்கு ஒரு கைபிடி அளவாவது பச்சரிசியை வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம்.

கடைசியாக லட்சுமி குபேரர் சிலையை வாங்கி வைக்கலாம்.

லட்சுமி குபேரர் சிலை கிடைக்காவிட்டாலும், லட்சுமி குபேரர் படத்தையாவது வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பு.

இதனால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

Back to top button