உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் தோசை; எப்படி செய்யலாம்?
பொதுவாகவே அனைவரும் தங்களது உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அழகு என்றால் பளபளப்பான சருமம் மட்டும் இல்லை. உடலை சீரான உடல் அமைப்புடன் வைத்துக்கொள்வதும் அடங்கும் எனலாம். உடல் எடையை குறைக்க பலரும் பல தந்திரங்களை செய்வது உண்டு. ஆனால் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் தோசைகளை அளவுக்கேற்ப சாப்பிட்டால் அது உடல் எடையைக் குறைக்க உதவும் என கூறுகிறார்கள். சாதாரண தோசைக்கு பதிலாக சுரைக்காய் மற்றும் பாசி பருப்பு தோசையை தயாரித்து சாப்பிடலாம். இதனால் உடலிற்கு தேவையான ரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் தேவையானளவு கிடைக்கும். எனவே அதை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – 1 கப்
அரிசி – 1 டீஸ்பூன்
சுரைக்காய்
கொத்தமல்லி இலைகள்
இஞ்சி
பச்சை மிளகாய்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பருப்பு மற்றும் அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.
ஊற வைத்து எடுத்ததை வடிக்கட்டி, அதனுடன் சுரைக்காய், கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
பின் வழமை போன்று தோசை சுட்டு எடுக்கவும்.
இவ்வாறு செய்தாலே போதும் எடை இழப்பிற்கான சுரைக்காய் தோசை ரெடி!