உடல்நலம்

நீங்க வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும்

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் பெண்களின் உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். PCOS, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், பலவீனமான மூட்டுகள், அழற்சி குடல் நோய்க்குறி உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

நெய்யில் உள்ள ஊட்டசத்துக்கள்
நெய் கலோரிகள் நிறைந்த உணவு. 100 மில்லி நெய் 883 கலோரி சக்தியை அளிக்கிறது. 100 மில்லி நெய்யில் கிட்டத்தட்ட 99.8 கிராம் கொழுப்பு உள்ளது. நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இதில் பியூட்ரிக் அமிலமும் உள்ளது.

நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நெய் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். இதில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது.

நெய் வீக்கத்தைப் போக்க உதவுகிறது.
ஆரோக்கியமான குடல்களை ஊக்குவிக்கிறது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டு விறைப்பைக் குறைக்கும்.
நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடாது.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது
குறிப்பு : சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதயநோய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

Back to top button