ஏனையவை

வீட்டில் தங்க நகையை எந்த இடத்தில் வைக்கக்கூடாது? நகை தங்கவே தங்காதாம்

இன்றைய காலகட்டத்தில் தங்க நகையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. என்னதான் விலை அதிகரித்து வந்தாலும் பெண்களுக்கு நகை மீதான பிரியம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது. நகைகளை நாம் சேமித்து வைக்கும் இடத்தை பொறுத்து அதிர்ஷ்டம் அடங்கியிருக்கின்றது. இந்நிலையில் தங்கத்தை எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தங்க நகைகளை ஒருபோதும் சமையலறையில் உள்ள அரிசி, பருப்பு போன்ற அஞ்சரைப் பெட்டிகளில் வைக்கக்கூடாது.

அடுப்பங்கறையில் அக்னி மூலையில் வைக்கும் தங்க நகைகள் ஒருபோதும் பெருகாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகின்றது. அடுப்பங்கறையில் வைக்கும் நகைகள் விரைவில் அடகு கடைக்கு போகும் அல்லது திருடு போக வாய்ப்பு உள்ளதாம். அதே போன்று வடமேற்கு மூலையில் உள்ள அறையில் தங்க நகைகளை சேமித்து வைக்கக்கூடாது. தங்க நகைகளை தென்மேற்கு மூலையில் உள்ள கிழக்கு அல்லது வடக்கு பார்த்த பீரோ அல்லது பெட்டகத்தில் வைக்கலாம். நகை வைக்கும் பெட்டி இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

Back to top button