ஆன்மிகம்

வீட்டில் எந்த சிலைகளை வைப்பது அதிர்ஷ்டம் கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீடுகளில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றும் உயிரினங்களும் நம் வீட்டில் உள்ள ஆற்றல் ஓட்டத்தை பாதிக்கலாம். பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

சில சிலைகள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டில் அடிக்கடி சிரமங்கள் ஏற்பட்டாலும் பண நஷ்டம் ஏற்பட்டாலும் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தை மனதில் வைத்து, சில வகையான சிலைகள் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றை வீட்டில் வைப்பது சிறந்த பலனை கொடுக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்தெந்த சிலைகளை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் கொடுக்கும் சிலைகள்

யானை சிலை

வாஸ்து சாஸ்திரத்தின் படி பித்தளை அல்லது வெள்ளி யானை சிலையை வீட்டில் வைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றவை அதிகரிப்பதுடன். நிதி செழிப்பையும் கொடுக்கும்.

இரட்டை அன்ன சிலை

வாஸ்து படி வீட்டில் இரட்டை அன்னம் சிலை வைப்பதால் திருமணத்தில் இருக்கும் தடைகளை நீ்க்குவதற்கு பெரிதும் துணைப்புரியும்.மேலும் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்பது ஐதீகம்.

மீன் சிலை

வாஸ்து படி உலோக மீனை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது. இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். நிதி நிலைமை சிறக்கும்.

வீட்டில் மீன் சிலைகளை வைப்பது மன அழுத்தத்தை குறைப்பதுடன் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

பசு சிலை

பசு இந்து மதத்தில் கோமாதா என்று வணங்கப்படுகிறது. இந்த சிலையை வீட்டில் வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சமே வராது என நம்பப்படுகின்றது.

ஆமை சிலை

வாஸ்து படி ஒரு உலோக ஆமையை வீட்டின் அறையின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் எல்லா விடங்களிலும் இலகுவில் வெற்றி கிடைக்கும். மேலும் இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

Back to top button