எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தி அடிப்படையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்தாகவும் நம்பப்படுகின்றது.
பொதுவகவே நமது உடலில் காணப்படும் எதிர்மமறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான பிரதான நோக்கமாகும். இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சிவப்பு கயிறு கட்டுவது தெய்வங்களின் ஆசீர்வாதத்தைத் கொடுக்கும் என்பது ஐதீகம். இருப்பினும், ஜோதிட சாஸ்திரதட்தின் அடிப்படையில் சிலருக்கு, சிவப்பு கயிறு கட்டுவது பாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இந்தவகையில் எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காரணம் என்ன?
பொதுவாகவே பூஜையில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
சில ராசிக்காரர்கள் குறிப்பாக சிவப்பு நிற கயிறை கட்டவே கூடாது. அதற்குப் பதிலாக மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிற கயிறை பயன்படுத்தலாம்.
சனிபகவானால் சில ராசிக்காரர்களுக்கு சிவப்பு கயிறு கட்டுவது நல்ல பலன்களை கொடுக்காது.கும்பம், மீனம் ஆகிய ராசியினர் ஒருபோதும் சிவப்பு கயிறைக் கட்டக் கூடாது.இது எதிர்பாராத பாதக விளைவுகளை கொடுக்கும்.
காரணம் மீனம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக இருப்பவர் தான் சனி பகவான். சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கையில் அல்லது கழுத்தில் சிவப்பு கயிறு கட்டினால் சனி பகவானின் கோப பார்வைக்கு காரணமாகி விடுவார்கள்.
இதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளும் துன்பங்களும் வந்துக்கொண்டே இருக்கும். இது தவிர மகர ராசியினருக்கும் சிவப்பு கயிறு பாதக விளைவுகளையே கொடுக்கும்.
மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினர் சிவப்பு நிற கயிறு கட்டினால் அதிர்ஷடம் கிடைக்கும் இவர்களுக்கு சிவப்பு கயிறு பெரும்பாலும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் சிறப்பு ஆசீர்வாதம் கிடைக்கும். இவர்களுக்கு சிவப்பு கயிறு நேர்மறை எண்ணங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.