ஆன்மிகம்

அள்ள அள்ள கொட்டிக்கொடுக்கும் குருபகவான்: பணமழையில் நனையப் போகும் ராசிகள் யார்?

கிரகங்களின் ராஜகுருவாக விளங்குபவர் மங்களநாயகன் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.

அவர் ஒரு ராசியில் உச்ச நிரைக்கு வந்தால் அந்த ராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இவர் தற்போத மேஷ ராசியில் பயணம் செய்து வருவதுடன் மே 1ம் திகதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

இவர் இடமாறுதலால் 12 ராசிகளுக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டி கிடைக்கும்.

அவ்வாறு எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டம் கிட்டபோகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மேஷம்
குருபகவான் உங்கள் ராசியில் தற்போது பணயம் செய்வதால் உங்களின் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றத்தை கொடுப்பார். உங்களுக்கான அனைத்து சுப செலவுகளும் உண்டாகும். வேலை இல்லாமல் மனவுளைச்சலில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். நினைத்துப்பாக்காத புதிய வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்.

2.கடகம்
குரு பகவான் ரிஷப ராசிக்கு மாறுகின்றதால் உங்களுக்கு சுப பலன்களை அள்ளி தரப்போகிறார். வாழ்க்கையில் பல்வேறு புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். வீட்டில் மங்கள காரியங்கள் இடம்பெறும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிய வாய்ப்புக்கள் வரும்.

3.சிம்மம்
உங்களுக்கு குருபகவான் மொத்தத்தில் இருந்து நல்ல முன்னேற்றத்தை தருவார். நீங்கள் இதன் பின்னர் வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் இதுவரையில் இருந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கும். கணவன் மனைவி மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

4.கன்னி
உங்களுக்கு சிறப்பான செயற்பாடுகளை குருபகவான் கொடுக்க போகிறார். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் குறையும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார். நினைத்தவை எல்லாம் நிறைவேறும் வாழ்க்கையில் இதுவரை வந்த பிரச்சனைகள் குறையும்.

Back to top button