ஆன்மிகம்

இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் விசேஷமானவர்கள்… என்ன காரணம் தெரியுமா?

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

ஆனால் பிறப்பிலேயே சில ராசியில் பிறந்த பெண்கள் மற்ற ராசி பெண்களை விட சற்று விசேஷமானவர்களாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த வகையில் மிகவும் விசேடமான தனித்தன்மை கொண்ட பெண்கள் எந்த ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி பெண்கள் மிகுந்த ஆற்றல் மிக்கவராகவும் எதற்கும் அஞ்சாதவராகவும் இருப்பார்கள். இயல்பிலேயே வசீகர தோற்றமுடைய இவர்கள் புதிய சவால்களுக்கு தங்களை எப்போதும் தயாராகவே வைத்திருப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் எந்த உறவில் இருந்தாலும் அதற்கு மிகவும் முக்கயத்துவம் கொடுப்பார்கள்.

விசுவாசத்துக்கு பெயர் பெற்ற இவர்கள் எப்போதும் மற்றவர்களை கவரும் வகையில் தான் இருப்பார்கள்.இவர்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் இயல்பிலேயே மற்றவர்களை காந்தம் போல் ஈர்க்கும் தோற்றமுடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் மர்மம் நிறைந்தவர்களாகவும் விசித்திரமான பண்புகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் ஆய்வு செய்யும் மனப்பான்மையுடன் இருப்பார்கள். சாகச உணர்வுடையவர்களாக இருக்கும் இவர்கள்யாருக்கம் அடிப்பணிய மாட்டார்கள்.

சுதந்திரமான வாழ்வை விரும்பும் இவர்கள் யாருக்கு நண்பராக இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பார்கள்.

Back to top button