பணவரவுக்கு வெள்ளிக்கிழமைகளில் உப்புடன் இதையும் சேர்த்து வாங்க வேண்டுமாம்
நமது வாழ்க்கையில் பணத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தாயார் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதற்காக நாம் பல பரிகாரங்களையும், பல வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். காரணம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கினால் தான் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்றும் கடன் பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவோம் என்றும், வீண் விரயங்கள் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு நாம் செய்யும் பரிகாரத்தில் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் உப்பு வாங்கும் பரிகாரமும் ஒன்று.
மகாலட்சுமி தாயார்
மகாலட்சுமி தாயார் வாசம் புரியும் பொருட்களாக பல பொருட்கள் கருதப்படுகின்றன. கடலில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள், மங்களகரமான பொருட்கள், வெள்ளை நிற பொருட்கள் மற்றும் வாசனை மிகுந்த பொருட்களில் மகாலட்சுமி தாயார் வாசம் புரிகிறாள். அந்த பொருட்களை வைத்து நாம் அவளை வணங்கினால் அவளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் கடலில் இருந்து உற்பத்தியாகும் கல் உப்பு, சங்கு போன்றவற்றில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
வாங்க வேண்டிய பொருட்கள்
வெள்ளிக்கிழமை அன்று காலையில் முடிந்த அளவு வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி அருகில் இருக்கும் கடைக்கு சென்று கல் உப்பு, மஞ்சள் கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் ஏலக்காயை வாங்கி வர வேண்டும். இந்த பொருட்களை வைத்து நாம் முறையாக வழிபாடு செய்யும் பொழுது அந்த வழிபாட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தையோ அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தையோ வாங்கிக் கொள்ள வேண்டும். அதை நன்றாக சுத்தம் செய்து வியாழக்கிழமை அன்றே தயார் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
கண்ணாடி பாத்திரம்
வெள்ளிக்கிழமை அன்று காலையில் அந்த நான்கு பொருட்களையும் வாங்கி வந்த பிறகு இந்த கண்ணாடி பாத்திரத்தை எடுத்து பூஜையறையில் வைத்து அந்த கண்ணாடி பாத்திரம் நிறைய உப்பை கொட்ட வேண்டும். பிறகு அதற்கு மேல் மஞ்சள் தூள், மஞ்சள் கிழங்கு மற்றும் ஏலக்காயையும் வைக்க வேண்டும். அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைக்க வேண்டும். இந்த கண்ணாடி பாத்திரத்தை நாம் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் யார் கண்ணிற்கும் தெரியாத அளவிற்கு வைத்து விட வேண்டும். இயலாதவர்கள் பூஜை அறையில் ஒரு மூலையில் வைத்து விடலாம்.
மஞ்சள்
மறுநாள் காலை சனிக்கிழமை அன்று பூஜை செய்த பிறகு இந்த கண்ணாடி பாத்திரத்தில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்று சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்ணாடி பாத்திரத்தை சுத்தம் செய்து வைத்து விட வேண்டும். மஞ்சள் கிழங்கை பெண்கள் குளிக்கும் பொழுது முகத்தில் பூச பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பழக்கம் இல்லாதவர்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இந்த மஞ்சள் கிழங்கை தானமாக தரலாம்.