இலங்கை

யாழ்ப்பாணத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 26ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button