ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

யோகத்தை அடையப் போகும் ராசியினர்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 02.03.2024, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.22 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று காலை 11.14 வரை விசாகம். பின்னர் அனுஷம். ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
எச்சரிக்கையாக பைக் ஓட்டவில்லை என்றால் விபத்தில் சிக்குவீர்கள். அன்புக்குரியவரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய மாட்டீர்கள். நம்பியவர்களால் ஏமாற்றப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது அலட்சியமாக இருக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுங்கள்.

ரிஷபம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கத்தை அதிகரிப்பீர்கள். சொத்துக்களில் இருந்த வழக்ககை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். நோய் பற்றிய கற்பனையால் கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் தெளிவு அடைவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். திறமைக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பரபரப்பாக வேலை பார்ப்பீர்கள்.

மிதுனம்
பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள். உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் விரிசலை உண்டாக்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலில் அவதிப்படுவீர்கள். அரசு வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள்.

கடகம்
நிதி நெருக்கடி குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் சாதகமான பலனை பெற மாட்டீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் பாதக நிலையை சந்திப்பீர்கள். நிலம் வாங்கி விற்பதில் நல்ல லாபம் அடைவீர்கள். அந்தஸ்தை அதிகரித்துக்கொள்ள ஆடம்பரச் செலவுகள் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த வில்லங்கம் விலகி உரிய பங்கை பெறுவீர்கள்.

சிம்மம்
கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த பணம் கைக்கு வந்து திக்குமுக்காடி போவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்த்து அதிக ஆர்டர்கள் பெறுவீர்கள். ஐடி தொழிலில் அற்புதமான லாபம் பார்ப்பீர்கள். நினைத்த காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி
வெட்டியாக பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவீர்கள். வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்காதீர்கள். காரியத் தடைகள் வந்தாலும் கவலைப்படாதீர்கள். கடின உழைப்பால் கம்பீரமாக நிற்பீர்கள்.

துலாம்
போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். நிலத்தில் செய்யப்பட்ட முதலீடுகளை பன்மடங்கு பெருக்குவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடைவீர்கள். தாராளமாக பணம் செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்
கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவியை பெற மாட்டீர்கள். வாக்கை காப்பாற்ற முடியாமல் அவமானப் படுவீர்கள். உற்பத்தியைப் பெருக்க கடுமையாக உழைப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள்.

தனுசு
உடல்நலப் பாதிப்பால் மருத்துவச் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சினையால் சுகவீனம் அடைவீர்கள். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீர்கள். ஐடி துறையில் தூக்கத்தைக் கெடுத்து வேலை பார்ப்பீர்கள். காதலியின் அலட்சியத்தால் நிம்மதி இழப்பீர்கள்.

மகரம்
நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த தொழிலை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். கழுத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுவீர்கள். அன்பை வெளிப்படுத்தி காதலியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.


கும்பம்
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். சகோதரிக்கு பண உதவி செய்வீர்கள். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அபிரிமிதமான பலனை அடைவீர்கள். வெளியூர்களில் கிளைகள் திறக்க முயற்சி மேற்கொள்வீர்கள். தொழிலுக்கு வாங்கிய பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்..


மீனம்
இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை பெறுவீர்கள். பெண்களால் ஆதாயம் அடைவீர்கள். வரவுகளை அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் விரும்பிய இடமாறுதல் பெறுவீர்கள்.

Back to top button