ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

ராஜயோகத்தை பெறப்போகும் ராசியினர்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் தை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 3.02.2024. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.24 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று அதிகாலை 02.43 வரை சுவாதி. பின்னர் விசாகம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செபெண்கள் தைரியமாக காரியம் ஆற்றுவீர்கள். பிள்ளைகளுக்கான கல்வி செலவை அதிகரிப்பீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகளை தேடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைப் புகுத்துவீர்கள். அரசுத்துறையில் திட்டமிட்டு வேலை செய்வீர்கள். அலுவலகப் பணிகளால் டென்ஷனை அடைவீர்கள். தடைபட்ட வேலைகள் சரளமாக நடக்கும். சந்திராஷ்டம நாள். ய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தையை திறமையாக முடிப்பீர்கள். வேலையிடங்களில் அன்பைக் காட்டி அனுகூலத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். தொழில் துறையில் இருந்த போட்டிகளை விலக்குவீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்
கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தை பொறுப்போடு நடத்துவீர்கள். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்படுவீர்கள். வாக்கு வன்மையால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். பிள்ளைகள் குறித்து மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்
மிதுனம்
அவமானங்களைக் கூட வெகு மானங்களாக மாற்றிக் கொள்வீர்கள். தொழில்துறைகள் சூடுபிடித்து லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபார சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். தனியார் துறை பணியாளர்கள் சிரத்தையுடன் வேலை செய்வீர்கள். காதலியின் மனம் புரியாமல் தடுமாறுவீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைக்கும் எதிரிகளை சமாளிப்பீர்கள்.

கடகம்
கடகம்
குடும்பத் தேவைகளை மனநிறைவுடன் பூர்த்தி செய்வீர்கள். வேலைப்பளுவால் உடல் சோர்வடைவீர்கள். கலைத்துறையில் தேவையற்ற பிரச்சனைகளால் அவமானப்படுவீர்கள். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போய் வெற்றிக்கு வழி வகுப்பீர்கள். அடுத்தவரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். வீண் செலவுகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

சிம்மம்
சிம்மம்
எந்த வேலையை முதலில் பார்ப்பது என்று குழம்புவீர்கள். ஊழியர்கள் ஒத்துழைப்பால் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். சகோதர உறவுகளுக்கு செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை குறைப்பீர்கள்.

கன்னி
கன்னி
குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். புதிய வியாபாரங்களில் தடம் பதிப்பீர்கள். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலுக்கான புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். போக்குவரத்திற்காக புதிய வாகனம் வாங்குவீர்கள்.

துலாம்
துலாம்
உறவினர்களின் சச்சரவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். விளையாட்டுக் பேசி வினையை அறுவடை செய்வீர்கள். வெளியூர் பயணங்களில் குறைவான பலனை அடைவீர்கள். பிள்ளைகளின் பிரச்சனைகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். தொழில்துறைகள் சுமாராக நடப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்
வீண் உறுதிமொழிகள் கொடுத்து வில்லங்கத்தில் மாட்டாதீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் துறைகளில் ஈடுபடாதீர்கள். தனித் தன்மையுடன் நடந்து வெளிவட்டார செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வெளி வேலைக்காக குடும்பத்தை விட்டுப் பிரிவீர்கள். தாயாரின் ஆஸ்துமா நோய்க்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

தனுசு
தனுசு
வெற்றிமேல் வெற்றியைக் குவித்து சந்தோஷத்தில் திளைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். திருமண காரியங்களில் ஏற்பட்ட தடையை நீக்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் பணம் பெறுவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். கைபேசி வாங்கி கொடுத்து காதலியின் அன்பை பெறுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான லாபம் அடைவீர்கள்.

மகரம்
மகரம்
அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள்.. கிளைத் தொழில்களுக்கு அடி போடுவீர்கள். நண்பரின் உதவியால் மனை இடம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பகை நீங்கி உறவுகளை பலப்படுத்துவீர்கள். வியாபாரத்தை விரிவாக செய்வீர்கள். வேலைப் பளுவை குறைப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள்.

கும்பம்
கும்பம்
செல்லுமிடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். குடும்பத்திற்காக கார் வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் பணம் திரட்டுவீர்கள். அன்பாக பேசி உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். தொந்தரவு தந்த நோய் விலகி சந்தோஷம் அடைவீர்கள். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் சேர்க்க திட்டமிடுவீர்கள்.

மீனம்
இனம் தெரியாத கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஏதாவது செலவு வந்து கை காசை செலவு செய்வீர்கள். தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள். வேலை பார்க்கும் இடங்களில் தேவையில்லாத பிரச்சனைகளால் கவலைப்படுவீர்கள். அறிவுத் திறமையால் அனைத்தையும் கடந்து வருவீர்கள்.

Back to top button