2024 ம் ஆண்டு ராஜ யோகத்தை அடையப் போகும் ராசியினர்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம். அவ்வாறு பயனடைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே புத்தாண்டின் போது 12 ராசிகளில் இருக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இதனால், சில ராசிகளுக்கு அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே கடினமாக உழைக்கும் திறன் இருக்கும். வருகின்ற ஆண்டு கிரக மாற்றங்கள் ரிஷப ராசியினருக்கு சிறந்த சாதக பலனை கொடுக்கும்.
சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க
சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க
ரிஷப ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பதில் கைதேர்ந்தவர்கள். இதனால் அடுத்த வருடம் பல வகைகளில் பல தொழில்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மகரம்
மகர ராசிக்காரர்களும் 2024ஆம் ஆண்டு நதி வரவு போதும் எனும் அளவுக்கு இருக்கப் போகின்றது. இவர்களிடம், வலுவான லட்சியங்களும் மற்றும் வெற்றிக்கான இடைவிடாத உந்துதல்களும் இருக்கும். இது, இவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெற உதவுகிறது.
அவர்களின் ஒழுக்கமான இயல்பு செல்வத்தைக் குவிப்பதற்கும் நிதிச் செழிப்பை அடைவதற்கும் துணைப்புரிகின்றது. அடுத்த ஆண்டு இவர்களை செல்வம் தேடி தரும்.
சிம்மம்
சிம்ம ராசியை உடைய இவர்கள், சிங்கத்தை போலவே அதன் கம்பீரம் மற்றும் தைரியம் போன்ற திறன் உடையவர்களாக இருப்பர். பிறரை கவரக்கூடிய கவர்ச்சிகரமான இயல்பு, மற்றவர்களை இவர் பேச்சை கேட்க வைக்கும் வகையில் இருக்கும்.
இந்த ராசியை சேர்ந்த பலர், உயர்வான இடத்தில் இருப்பர். தன்னம்பிக்கை, தைரியம் என அனைத்தும் இவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும். கிரக மாற்றங்கள் இந்த ராசியினரை அடுத்த ஆண்டு பண மழையில் நனைய வைக்கப் போகின்றது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பண ரீதியாக எடுத்து வைக்க இருக்கும் ஒவ்வொரு அடியும் இனி வெற்றிதான். அவர்களின் உன்னிப்பாக கவனிக்கும் திறன் மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் ஆகியவை புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவும்.
இவர்களுக்கு பல்வேறு நிதி முயற்சிகளின் அபாயங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் தெரியும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அது குறித்து தீர ஆராய்ந்த பின்னரே எடுப்பர்.
சிறந்த பட்ஜெட்டை உருவாக்குவது எப்படி என்பதும் இவர்களுக்கு தெரியும். இதனால், கண்டிப்பாக அடுத்த ஆண்டு இவர்களுக்கு பணவரவில் ஜாக்பாட் அடிப்பது நிச்சயம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், வருகின்ற ஆண்டு ஏராளமான செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க வாய்ப்புள்ளது. அவர்களின் உறுதியான மற்றும் வளமான இயல்பினால் நிறைய செல்வங்களைக் குவிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது.
இந்த ராசியினர் தங்களுக்கென உயர்ந்த இலக்குகளை அமைத்துக் கொள்கிறார்கள், அவற்றை அடைய அயராது உழைக்க அவர்கள் எப்போதுமே பயப்படுவதில்லை. இதனால், அடுத்த ஆண்டு அவர்களுக்கு செல்வ செழிப்பு மிகுந்த ஆண்டாக அமையும்.