உடல்நலம்

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சூப்பர் உணவுகள்

பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே விரும்புவர். ஆனால், தூசி, மாசு, புறஊதாக் கதிர்கள், தூய்மையற்ற நீர் போன்றவை கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.

பல பெண்கள் ஷாம்புகள், எண்ணெய்கள், பிற தயாரிப்புகள் மூலம் கூந்தல் வளர்ச்சியை பெற முயற்சி செய்கின்றனர். ஆனால், உணவு முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சூப்பர் உணவுகள்:

நெல்லிக்காய்: ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது. நரை முடி, பொடுகு பிரச்சனைக்கு நல்லது. நெல்லிக்காய் மற்றும் கற்றாழை மாத்திரை/ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

கறிவேப்பிலை: இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்தது. முடி உதிர்வை குறைக்கும், நரைமுடி வராமல் பாதுகாக்கும். தினமும் காலையில் 3-4 கறிவேப்பிலை இலைகளை மென்று வரலாம்.

பாதாம் மற்றும் பிற பருப்புக்கள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E மற்றும் பயோட்டின் நிறைந்தது. தினமும் காலையில் 5 பாதாம் மற்றும் 1 வால்நட் சாப்பிடலாம்.

முருங்கை: வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஜினேற்ற பண்புகள் நிறைந்தது. முடியின் நுண்குமிழ் சேதத்தை தடுக்க உதவுகிறது. மதிய உணவில் முருங்கை பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

வேர்க்கடலை: வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் நிறைந்தது. இரவில் ஊறவைத்த வேர்க்கடலையை அவல், உப்புமா போன்றவற்றில் சேர்க்கலாம்.

எள் + சீரகம்: கால்சியம் மற்றும் மாங்கனீசு நிறைந்தது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. சப்பாத்தியில் எள்ளு சேர்த்து சாப்பிடலாம், சாப்பிட்ட பிறகு சீரக டீ குடிக்கலாம்.

திரிபலா: பாக்டீரியா எதிர்ப்பு பண்பினை கொண்டது. முடி வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியையும் தடுக்கும். இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பு டீ போட்டு குடிக்கலாம்.

சாலியா விதைகள்: கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, E போன்றவை உள்ளது. ¼ டீஸ்பூன் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

வெந்தயம்: பைட்டோ எஸ்ட்ரோஜன் நிறைந்தது. முடி சேதமாகாமல் பாதுகாக்கும். ஒரு டம்ளர் தண்ணீருடன் ஊறவைத்து, அரைத்த வெந்தயத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளரிக்காய்: சிலிக்கான் மற்றும் சல்பர் நிறைந்தது. கொத்தமல்லி மற்றும் புதினா உடன் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button