இலங்கை

சாந்தனின் மரணத்தில் தொடரும் குழப்பங்கள் : அரசியல்வாதிகள் செய்த பெரும் துரோகம்

மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், சாந்தனின் மரணம் இயற்கையானது என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும், இந்த விவகாரத்தில் பல குழப்பங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஊடகத்திற்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், சாந்தனின் மரணம் குறித்த சந்தேகங்களை ராஜ்குமார் ரஜீவ்காந்த் எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 28.02.2024 அன்று உயிரிழந்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

  • இலங்கைக்கு உயிருடன் கொண்டு வருவதில் இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் தோல்வியடைந்துள்ளனர்.
  • சாந்தன் ஒரு நல்ல இடத்தில் இருந்திருக்கவேண்டிய நபர். ஆனால் இந்த கொலை வழக்கு அவரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Back to top button