உடல்நலம்

பிஸ்தா

பொதுவாக நட்ஸ்களில் பல சத்துக்கள் உள்ளன என்பது எல்லோர்க்கும் தெரிந்த விடயமாகும்.
இவ்வாறு பல சத்துக்களை இவை கொண்டிருந்தாலும் இவற்றின் விலை மிகவும் அதிகமானதாக இருப்பதால் பலருக்கும் இவற்றை வாங்கி சாப்பிடுவது கடினமானதாக இருக்கிறது. எனினும் தினமும் வாங்கி சாப்பிடமுடியாவிட்டாலும் அவ்வப்போது நட்ஸ்களை வாங்கி உண்பது கட்டாயமானதாகும்.

நட்ஸ்களில் பல வகைகள் இருப்பினும் பிஸ்தா எப்பொழுதும் முதலிடத்தை பிடிக்கின்றது. பலரும் பேச்சுவழக்கில் “நீ என்ன பெரிய பிஸ்தாவா ” என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். ஆம் பிஸ்தாவில் பல நன்மைகள் உள்ளன
தினமும் ஒரு கைப்பிடி பிஸ்தா சாப்பிட்டுவந்தால் கொஞ்ச நாட்களிலேயே உடல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்வீர்கள்.

அத்தோடு இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் காணப்படுகின்றது. எனவே இதயம் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கின்றது.

ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளில் உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உண்டு என்பதால் தினம் ஒரு வகை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை வராமல் கட்டுப்படுத்த முடியும். ட்ரை ஃப்ரூட்ஸ் வகையில் பிஸ்தா பருப்புகளும் அடக்கம்.

தனியாகவோ, பச்சையாகவோ, வறுக்கப்பட்டோ, அலங்கரிப்பு பொருளாகவோ, உலர் பழங்களுடனோ, அல்வா, ஐஸ்க்ரீம் வகையறாக்களுடனோ இவை பயன்படுத்துவது அதிகம். இந்த பிஸ்தா பருப்பு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

பிஸ்தா சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

ஆண்மையை அதிகரிக்கும்

ஆண்மையை அதிகரிக்கும் பங்கில் பிஸ்தா ஒரு வரமாக அமைந்துள்ளது.

இந்த நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு ஆணும் பலவிதமான மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனால் பலருக்கும் தாம்பத்திய வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பாலியல் அதிருப்தி, விறைப்புத்தன்மை குறைபாடு, பாலுணர்ச்சி செயல்பாடு, புணர்ச்சி முறை போன்ற பல பிரச்சனைகள் காணப்படுகின்றது. இவ்வாறான அதிருப்தியை போக்க தினமும் ஒரு கை பிடி பிஸ்தா உட்கொள்வது சிறந்ததாகும்.

கண்களுக்கு ஆரோக்கியமளிக்கின்றது


இது பார்வையை மேம்படுத்துவதோடு. விழி திசுக்களின் பாதிப்புகளை குறைத்து கண் பார்வை இழப்பு ஏற்படுவதை குறைகின்றது.

3. மூளை

மூளை

இதில் விட்டமின் B6 என்கின்ற மூளைக்கு மிகவும் தேவையான விட்டமின் அதிகமாக காணப்படுகின்றது. எனவே மூளையின் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி நியாபக சக்தி மற்றும் கவனத்தை அதிகரிக்கின்றது.

இதனோடு மூளை பாதிப்புக்களை குறைத்து நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.

4. கொலஸ்ட்ரால்

பிஸ்தா எமது இரத்தத்திலுள்ள தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கின்றது. இவைமட்டுமின்றி இரத்த நாளங்களிலுள்ள கொழுப்புகளை தடுத்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைகின்றது.

5.நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

இதில் உள்ள பாஸ்பரஸ் புரோடீன்களை உடைத்து அமினோ ஆசிட்டுக்களாக மாற்றிவிடும் எனவே அமினோ ஆசிட்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கின்றது.

எங்களது www.tamilaran.com இணைய பகுதியை அல்லது https://play.google.com/store/apps/details?id=com.tamilaran.tamilnews என்ற mobile apps வழியாக பார்வையிடலாம்.

Tamilaran channel : https://whatsapp.com/channel/0029Va4npnPJf05hCdnMsa1z

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button