உடல்நலம்

முடி வளர்ச்சிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி? 2 நிமிடங்கள் போதும்

முடி வளர்ச்சிக்கு வெங்காயம்

பலர் தற்போது தலைமுடி உதிர்தல், இளவயதில் நரை, முடி அடர்த்தி குறைவது, வழுக்கை, பொடுகு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்காக கண்ட கண்ட ரசாயன ஷாம்பூ மற்றும் க்ரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய ஒரு முறை வெங்காயத்தை பயன்படுத்துவது.

வெங்காயம் ஏன் முடி வளர்ச்சிக்கு நல்லது?

வெங்காய சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் சல்பர் சத்து முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இதனால் சருமத்தில் உள்ள செல்கள் பாதுகாக்கப்பட்டு முடி உதிர்தல் குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது.

வெங்காயத்தை பயன்படுத்தி முடி வளர்ச்சிக்கு செய்யக்கூடிய ஒரு எளிய முறை:

  • வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீர் சிறிதளவு மட்டுமே சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த சாற்றை மட்டும் பிழிந்து எடுத்து, அதில் கற்றாழை ஜெல் சேர்க்கவும்.
  • இரண்டையும் ஒன்றாக கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து எடுத்தால் இயற்கையான Hair Mask தயாராகிவிடும்.
  • இதை தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசலாம்.
  • தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை இதை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.

பிற குறிப்புகள்:

  • வெங்காய சாறு தலையில் தடவும் போது சிறிது எரிச்சல் ஏற்படலாம். அப்படி என்றால் தண்ணீர் விட்டு கழுவி விடவும்.
  • வெங்காய சாறுடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை சேர்த்து பயன்படுத்தலாம்.
  • தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது முடி வளர்ச்சிக்கு நல்லது.
  • சத்தான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது போன்றவை முடி ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

முடிவுரை:

வெங்காயம் ஒரு எளிய மற்றும் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய இந்த முறையை முயற்சி செய்து பலனடைந்து கொள்ளுங்கள்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button