இன்றைய ராசிபலன்(13.02.2023)


புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தைவழி உறவி னர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகை யில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வப் வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங் கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். மாலையில் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் அதிகரிக்கும்.

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். விநாயகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர் களை அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்கு தாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற் படும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.