ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

வெற்றியை அடையப் போகும் ராசியினர் ; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 03.03.2024, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று காலை 11.50 வரை அனுஷம். பின்னர் கேட்டை. அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறை சந்திப்பீர்கள். அஷ்டம சந்திரனால் அவஸ்தைப்படுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவீர்கள். ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள். வண்டி வாகனங்களில் போகும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.


ரிஷபம்
வியாபாரத்திற்கு தேவையான நல்ல செய்திகளை வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். தொழிலில் உருவாகும் போட்டிகளை சுலபமாக முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவீர்கள். காதலி மனதை கொள்ளை அடிப்பீர்கள்.

மிதுனம்
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடல் பாடல் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள். பணியாளர்கள் ஊக்கத்துடன் வேலை பார்ப்பீர்கள். பணவரவை தாராளமாக அடைவீர்கள். நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள். வெளிச் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.


கடகம்
நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்துவதால் உறக்கமிழப்பீர்கள். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி அடைவீர்கள். தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடுமையான உழைப்பால் நல்ல பெயர் வாங்க பாடுபடுவீர்கள். பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடைவீர்கள். வீண் வாக்குவாதங்களில் இறங்கினால் அவமானப்படுவீர்கள்.


சிம்மம்
முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகளை திறப்பீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவீர்கள். பணியாளர்கள் கனிவுடன் கவனிக்கப்படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டால் மிகுந்த உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். சிக்கலில் இருந்த வழக்குகளுக்கு சுலபமாக தீர்வு காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.


கன்னி
ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுத்து மனைவி மக்களை அசத்துவீர்கள். புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள். உரிய நேரத்தில் உறவினர்களின் உதவி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கிடைத்து வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

துலாம்
செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். அனைவரையும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட வைப்பீர்கள். நண்பரின் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான பலனை பெறுவீர்கள். அரசாங்க வேலை கிடைத்து பணியில் அமர்வீர்கள். புதிய வீடு கட்ட அடித்தளம் அமைப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் பெறுவீர்கள்.


விருச்சிகம்
வளர்பிறை சந்திரன் உதவியால் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள். பணியாளர்கள் டென்ஷனாக இருப்பீர்கள். மருத்துவச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். அலைச்சல் மிகுதியால் தூக்கத்தை இழப்பீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் குழப்பம் அடைவீர்கள்


தனுசு
மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் விபத்தை சந்திப்பீர்கள். நண்பர்களின் ஆதரவை நல்ல முறையில் பெறுவீர்கள். தாயாரின் கால் வலிக்காக ஸ்கேன் எடுப்பீர்கள். கடமைக்காக வேலை செய்யாதீர்கள். பண இழப்பை தவிர்க்க பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.


மகரம்
.நீண்டகால திட்டத்தை இன்று நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சியை நடத்துவீர்கள். கோயில் தரிசனங்களுக்காக குடும்பத்துடன் செல்வீர்கள். தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். பொருட்கள் விற்பனையால் வியாபாரிகள் புது உற்சாகம் அடைவீர்கள். சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்குவீர்கள்.


கும்பம்
கண்ணை மூடிக்கொண்டு காரியம் செய்தாலும் விண்ணைத் தொடும் வெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணம் தாராளமாக புழங்குவதால் ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். சாதுரியமான செயலால் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். வேலைத் திறமையால் பணியாளர்கள் மதிப்பை உயர்த்தி கொள்வீர்கள். எதிரிகளை முறியடித்து ஓட வைப்பீர்கள்.


மீனம்
எச்சரிக்கையாக செயல்படாவிட்டால் உறவினர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுப்பீர்கள். வேலை காரணமாக அலைபவர்கள் வேளை தவறாமல் சாப்பிட தவறாதீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள். நல்லது செய்வதாக எண்ணி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். தொழிற்சாலை இயந்திரங்களில் வேலை செய்யும்போது மனதை அலைபாய விடாதீர்கள்.

Back to top button