ஏனையவை

மீதமான சாதத்தில் மொறு மொறு பக்கோடா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்

பொதுவாக வீட்டில் சமைக்கும் சாதம் மிஞ்சிவிடும். அதை வீணாக்காமல் மொறு மொறு பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்னாக்ஸாக இருக்கும். அந்தவகையில், மீதமான சாதம் வைத்து மொறு மொறு பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சாதம்- 1 கப்
வெங்காயம்- 2
பூண்டு- 6 பல்
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 3
கடலை மாவு- 4 ஸ்பூன்
அரிசி மாவு- 2 ஸ்பூன்
முந்திரி- 15
மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
பெருங்காயம்- ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
முதலில் மீதமான சாதத்தை கைகளால் நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதில் நறுக்கிய வெங்காயம், இடித்த பூண்டு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, நறுக்கிய இஞ்சி, பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து இதில் முந்திரி பருப்பு, கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்துக்கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் வைத்து சூடானதும் சிறிய சிறிய உருண்டையாக சேர்த்து பொரித்து எடுத்தால் மொறு மொறு பக்கோடா தயார்.

Back to top button