கஞ்சி குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்- யார் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
![கஞ்சி குடிப்பதால்](https://tamilaran.com/wp-content/uploads/2025/02/White-Minimalist-Economics-Headline-News-Instagram-Post-1-6-780x470.jpg)
பொருளடக்கம்
கஞ்சி என்பது நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. கஞ்சி குடிப்பதால் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும். உயர் ரத்த அழுத்தம், அசிடிட்டி அல்லது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கஞ்சியை குறைந்த அளவில் அல்லது முழுமையாகவோ குடிக்கக்கூடாது.
![](https://tamilaran.com/wp-content/uploads/2025/02/download-4.jpg)
கஞ்சி குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
- அசிடிட்டி: கஞ்சி புளிப்பாக இருக்கும் என்பதால் இன்னும் புண்ணை எரிச்சலாக்கும். அசிடிட்டி, வாயு, நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கஞ்சி பிரச்சனையை ஏற்படுத்துமாம்.
- உயர் ரத்த அழுத்தம்: கஞ்சியில் உப்பு அதிகமாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
- வயிற்றுப்புண்: தொண்டை அல்லது வயிற்றில் புண் இருப்பவர்கள் கஞ்சி குடிக்கக்கூடாது. கஞ்சி புளிப்பாக இருக்கும். இது புண்ணை எரிச்சலாக்கும்.
- சிறுநீரக பிரச்சனை: கஞ்சி போன்ற நொதித்த உணவுகளில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது சிறுநீரக நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
யார் எல்லாம் கஞ்சி குடிக்கக்கூடாது?
- அசிடிட்டி, வாயு, நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள்
- உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
- வயிற்றுப்புண் உள்ளவர்கள்
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
- சளி, இருமல் இருப்பவர்கள்
![](https://tamilaran.com/wp-content/uploads/2025/02/download-3.jpg)
![](https://tamilaran.com/wp-content/uploads/2025/02/download-2.jpg)
![](https://tamilaran.com/wp-content/uploads/2025/02/download-1-1.jpg)
எப்படி கஞ்சி குடிக்கலாம்?
- கஞ்சியை குளிர்ச்சியாக குடிக்காமல் வெதுவெதுப்பாக குடிக்கவும்.
- பகலில் மட்டும் குடிக்கவும்.
- சிலர் ஒரு டம்ளர் நிறைய கஞ்சி குடிக்கறாங்க. ஆனா, அரை டம்ளருக்கு குறைவாத்தான் குடிக்கணும்.
- கஞ்சியில் சிறிதளவு இஞ்சி சேர்த்து குடிப்பது நல்லது.
- கஞ்சியுடன் வேறு உணவுகளையும் சேர்த்து சாப்பிடலாம்.
முடிவு:
கஞ்சி ஆரோக்கியமான உணவு என்றாலும், அனைவருக்கும் ஏற்றது அல்ல. உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப கஞ்சியை குடிக்க வேண்டும். மேற்கூறிய பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பின்னர் கஞ்சி குடிக்கலாம்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.