இலங்கை

மருந்துகளின் தரம் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மருந்துகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர் மீளாய்வு செய்ய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல், தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Back to top button