இலங்கை

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரிக்கும் தொற்றாளர்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, யாழ்ப்பாணத்தில் ஐந்து கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் கடந்த வாரம் மருத்துவமனை அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

அந்த கொரோனா நோயாளிகளை சந்தித்த பின்னர், சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்குப் பிறகு, புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்படும் மருத்துவ ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Back to top button