இலங்கை

அமுலுக்கு வரும் 13 வது திருத்தச்சட்டம் | ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தம் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தெற்கிற்கும் அவசியம் என்றும் தெற்கிலுள்ள முதலமைச்சர்களும் இதனையே கோருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மக்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான சந்தேகம் உள்ளதால், சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,

வடக்கு, கிழக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரச்சினைகளை ஒதுக்கியோ, காலந்தாழ்த்தியோ தீர்க்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தீர்வு தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற அரச தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Back to top button