விளையாட்டு

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ள அவுஸ்திரேலியா

இவ்வாண்டு இடம்பெற்ற 13 ஆவது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஆமதாபாத்தில் இன்று ( 19.11.2023) நடந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது.

100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி – லோகேஷ் ராகுல் ஜோடி காப்பாற்றியது. இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய செய்த ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த உலகக்கோப்பை போட்டித்தொடரில் இதுவரையில் இந்திய அணி தோல்வியடையாது இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பியனான அணி

சம்பயினான அணிக்கு இலங்கை நாணயப்படி 131 கோடி ரூபா பணப்பரிசும் சொந்தமானது.இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 65 கோடி ரூபா கிடைத்தது.

அலன் போர்டர், ஸ்டீவ், ரிக்கி பொன்டிங் (2 தடவைகள்), மைக்கல் க்ளார்க் ஆகியோரைப் பின்பற்றி இப்போது அவுஸ்திரேலியாவை உலக சம்பியனாக பெட் கமின்ஸ் வழிநடத்தியுள்ளார்.

அத்துடன் இந்த வருட மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்தியாவை அவுஸ்திரேலியா வெற்றிகொண்டு சம்பியனாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்கள் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்று உலக சம்பியனானது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் அரை இறுதிவரை அமோகமனா ஆட்டத்திறனை வெளிப்படுத்திவந்த இந்தியா, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இரசிகர்கள் முன்னிலையில் அழுத்தத்துக்கு மத்தியில் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.

இந்தியா சார்பாக ரோஹித் ஷர்மா (47), விராத் கோஹ்லி (54), கே.எல். ராகுல் (66) ஆகிய மூவரே 45 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ரோஹித் ஷர்மா
அவர்களில் ரோஹித் ஷர்மா மாத்திரமே வேகமாக ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அவர் மாத்திரமே 3 சிக்ஸ்களை பெற்றிருந்தார்.

இந்திய இன்னிங்ஸில் 13 பவுண்டறிகளே அடங்கியிருந்தன. பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

241 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. இந்தியா 240 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டதால் சோர்வடைந்திருந்த இரசிகர்கள், அவுஸ்திரேலியாவின் முதல் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதும் உயிர்பெற்று இந்திய அணிக்கு ஆரவாரம் செய்து உற்சாகம் ஊட்டினர்

டேவிட் வோர்னர் (7), மிச்செல் மார்ஷ் (27), ஸ்டீவன் ஸ்மித் (15) ஆகிய மூவரும் வேகமாக ஓட்டங்களைப் பெற முயற்சித்து விரைவாகவே ஆட்டம் இழந்தனர்.

எனினும் ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

120 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்கு பக்கபலமாக மிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மானுஸ் லபுஷேன் 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹமத் சிராஜ் 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Back to top button