விளையாட்டு

உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 20 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியை பெற்றுள்ளது. தர்மசாலாவில் இன்றைய தினம் (22-10-2023) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகப்பட்சமாக டேரில் மிட்செல் 130 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 75 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் முகமது ஷமிச்ர் 5 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்படி 274 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை ஈட்டியது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 95 ஓட்டங்களை பெற்றுதுடன் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 46 ஓட்டங்களையும்ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த வெற்றி மூலம் உலக கிண்ண கிரிக்கெட் தொடர்பில் 20 ஆண்டுகள் கழிந்து நியூசிலாந்து அணியை இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button