ஆன்மிகம்

விஜய தசமி நாளில் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள 3 யோகங்களால் யோகத்தை பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் விஜய தசமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. அதில் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் இருப்பதால், சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அதோடு குருவும், சுக்கிரனும் நேருக்கு நேர் அமர்ந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். அத்துடன் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. விஜய தசமி நாளில் 3 மங்களகரமான யோகங்கள் ஒன்றாக உருவாகியிருப்பதால் அதன் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.

கடகம் கடக ராசிக்காரர்கள் விஜய தசமி நாளில் உருவாகியுள்ள 3 ராஜயோங்களால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். சிலர் எதிர்பாராத லாபத்தை வியாபாரத்தில் பெறக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சிலருக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு விஜய தசமி அன்று உருவாகும் 3 யோகங்களால் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் இந்த அரிய சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம் விஜய தசமி நாளில் 3 யோகங்களால் கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். துர்கா தேவியின் அருளால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள். நிதி நிலை வலுவாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

Back to top button