கனடா மக்களுக்கு Flu தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளது. சமீபகாலமாக தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ள நபர்களுக்கு இது சரியான நேரம் என மருத்துவர் Allison McGeer தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாத இறுதி மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் எண்ணிக்கை அதிரிக்கும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இரண்டு வாரங்களுக்குள் சரியாகலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாகாணத்தை பொறுத்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வேறுபடுவதும் தெரியவந்துள்ளது.