சுவிட்சர்லாந்து

சுவிஸில் மொபைல் பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கிய செய்தி

சுவிட்சர்லாந்து அரசு அறிமுகம் செய்யும் சில விதிகள் காரணமாக, மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மின் தடை நேரங்களில் மொபைல் பயன்பாட்டாளர்கள் பிரச்சினைகளை சந்திப்பதை தவிர்ப்பதற்காக, மொபைல் நிறுவனங்கள் அவசர கால ஜெனரேட்டர்களை நிறுவவேண்டும் என சுவிஸ் பெடரல் அரசு விரும்புகிறது. மூன்று நாட்கள் வரை மின்சாரம் இல்லாவிட்டால்கூட, மொபைல் சேவையில் பாதிப்பு வராமல் இருப்பதை மொபைல் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.

மேலும், இத்திட்டம் குறித்து அரசு ஆலோசனை செய்துவரும் நிலையில், அதற்கு 150 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அப்படி மொபைல் நிறுவனங்கள் செலவு செய்து மின் தடை ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அந்த செலவும், மொபைல் பயன்பாட்டாளர்கள் தலையிலேயே விழும் என எதிர்பார்க்கப்படுவதால், மொபைல் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது

Back to top button