12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் குரு; செல்வம் பெருகும் இராசிகள்
ஒவ்வொரு இராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர் குரு பகவான் அதனால் இவரை ஆண்டு கிரகம் என கூட அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் முழு சுடர் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான் எதிர்வரும் (01.05.2023) ஆம் திகதி மேஷத்திலிருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரசரின் மகன் பிருகஸ்பதி எனும் குரு பகவான்.
இவர் நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்ததோடு, பல யாகங்களை நடத்தி நவகிரகங்களில் அந்தஸ்து பெற்றதோடு, தேவர்களின் குருவாக மாறினார். மிகவும் ஒளி படைத்த கிரகம், சுப கிரகம். இவர் ஜோதிடத்தில் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் சஞ்சரித்து பலன் தரக்கூடியவர்.தற்போது குரு மேஷத்திலும், எதிர்வரும் (01.05.2023) திகதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்.
குருவின் பார்வை :
குரு பகவான் பகை வீடான ரிஷபத்தில் சஞ்சரிக்க உள்ளார். அவரின் 5,7,9 பார்வை மூலமாக நற்பலன்களை அள்ளித்தருவார்.
5ம் பார்வையால் கன்னி ராசியையும், 7ம் பார்வையால் விருச்சிக ராசியையும், 9ம் பார்வையால் மகர ராசியையும் பார்த்து அருள உள்ளார்.
ஒருவருக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அதனால் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. குருவின் அனுகூலத்தால் ஒருவருக்கு வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை தீர்ந்து அதிர்ஷ்டத்தை மேம்படுத்தலாம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, உங்கள் ராசியிலேயே குருவின் சஞ்சாரம் நடக்க உள்ளது. நிதிநிலை முன்பைவிட மேம்படும்.செலவுகள் கூடும்.
அதனால் செலவுகளை கட்டுப்படுத்துவதும், சரியாக திட்டமிட்ட்டு சுப செலவுகளை செய்வதும் உங்களை முன்னேற்றுவதாக இருக்கும்.
புதிய வேலையை தொடங்குவீர்கள்.
வீட்டில் திருமணம் உள்ளிட்ட மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்கு குருவின் 5ம் பார்வை விழுகிறது.
இதனால் இதுவரை தடைப்பட்டிருந்த உங்கள் வேலைகள் மீண்டும் நிறைவேற ஆரம்பிக்கும்.
உத்தியோகத்தில் இருக்கக்கூடியவர்களுக்குப் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளதோடு, முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.
சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகலின் மூலம் அனுகூலமும், நல்ல செய்திகளும் தேடி வரும்.
வெளியூர், வெளிநாடு வாய்ப்பு பெறுவீர்கள்.