உடல்நலம்

பேரீச்சம்பழம் ஊறவைத்து சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்; இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

பேரிச்சம்பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அளப்பரிய நன்மை பயக்கும். ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும் காலை உணவில் பேரிச்சம் பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஊறவைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊறவைத்த பேரிச்சம்பழத்தின் நன்மைகள்
ஊறவைத்த பேரிச்சம்பழங்கள் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.இதில் சரியான அளவு நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சரும பராமரிப்புக்கு ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் துணைபுரிகின்றன. சருமத்தை பாதுகாக்க துணைபுரிவதுடன், கறை, அழுக்கு, மாசு போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

ஊறவைத்த பேரீச்சம்பழத்தை தினமும் காலையில் உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை சீராக உதவுகின்றது.

ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் கால்சியம், செலினியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன, இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டால் எலும்புகள் வலுவடையும்.

ஊற வைத்த பேரிச்சம்பழத்தில் சரியான அளவு இரும்புச்சத்து உள்ளது. ஊறவைத்த பேரிச்சம்பழத்தை உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. குறிப்பாக இரத்த சோகையை சரிசெய்யும் அருமருந்து பேரிச்சம் பழம் தான் என கூறினால் மிகையாகாது.

உடல் எடையை அதிகரிக்கவும் பேரிச்சம் பழம் உதவுகிறது. நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்றால் உடல் எடையை அதிகரிக்க ஊறவைத்த பேரிச்சம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய புரதங்கள் உள்ளன. இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

Back to top button