ஆன்மிகம்

இந்த ஆண்டு இந்த ராசியினருக்கு அமோகமா இருக்குமாம்… யார் யார்னு தெரியுமா?

புதிய ஆண்டுக்குள் கால் பதித்து சில தினங்களே ஆகின்றது.ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு சில ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப் போகிறார்கள். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் கை கூடி வர உள்ளது. இவ்வாறு அடுத்த ஆண்டில் ராஜ யோகம் அடையப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பண வரவு தர உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.உணர்ச்சி வெளிப்பாடுகளில் இயல்பாக இருங்கள். குடும்ப நெருக்கத்தில் வளர்ச்சி காணப்படும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வியாபாரம் கைகூடி வரும். வீடு மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவைப் பேணுங்கள். அன்புக்குரியவர்களுடன் இணக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

2024 புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எச்சரிக்கையாக இருங்கள். தேவையான தகவல்களை பகிரவும். உறவினர்களுடன் நெருக்கம் பேணவும்.

கன்னி

குரு பகவானின் பார்வை கிடைப்பதால் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. முக்கியமான பொருளாதார பரிவர்த்தனைகள் வேகம் பெறும். பொருளாதார மற்றும் வியாபார முயற்சிகளில் வேகம் அதிகரிக்கும். பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

Back to top button