அசல் மாதிரியே வேலை செய்யும் செயற்கை மனித மூளை ; அமெரிக்காவின் புதிய தொழில்நுட்பம்
இன்றைய தொழில்நுட்பம் எண்ணிப்பார்க்க முடியாத பல சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை 3D ப்ரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர்.
அவர்களது இந்த கண்டுபிடிப்பு நரம்பியல் துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
3D ப்ரிண்டிங் என்பது பொருட்களை முப்பரிமானத்தில் உருவாக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பம். சிக்கலான வடிவங்களை உருவாக்க பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் கால் பதிக்காத துறை மிகவும் குறைவு என்றே கூறலாம்.
மனித மூளை
இன்றைய திகதிக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தும் இம்ப்லான்ட்கள் (Implants) பல இந்த தொழில்நுட்பம் மூலம் உருவக்கப்படுகின்றன. அதன் அடுத்த கட்டமாக மனித மூளையை 3D பிரிண்டிங் மூலம் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சூ-சுன் ஜாங் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
3D ப்ரிண்டிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூளையானது மனித மூளையை போலவே வளர்ச்சியடைந்து அதன் செயல்பாடுகளோடு இயங்கும் என்று அதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த கண்டுபிடிப்பானது நரம்பியல் வளர்ச்சியில் கோளாறு இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 3D ப்ரிண்டிங் தொழில்நுட்பம் கொண்டு ஹாரிசான்டல் லேயரிங் (Horizontal Layering) மற்றும் சாஃப்டர் பயோ இங்க் (Softer Bio-ink) மூலம் இந்த செயற்கை மூளை உருவாக்கப்ப்ட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகம்
பொதுவாக 3D ப்ரிண்டிங் வெர்டிகள் லேயரிங் (Vertical Layering) மூலம் செயல்படும்போது, ஜாங் மற்றும் அவரது குழுவினர்கள் ஹரிசான்டல் லேயரிங்கை பயன்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் மனித மூளையின் தோற்றத்தை போலவே மிகவும் துள்ளியமாக இருக்கும் செயற்கை மூளையை உருவாக்க முடியும் என்பதால் இந்த மாற்றத்தை அவர்கள் கையாண்டுள்ளனர்.
தனது இந்த கண்டுபிடிப்பைப்பற்றி பேராசிரியர் ஜாங் கூறுகையில், “இந்த செயற்கை மூளை உருவாக்கத்தின் மூலம் மூளை செல்களைப் பற்றியும் மூளையின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு செய்துகொள்கின்றன என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு ஆராய்ச்சியாளர் யுவான்வேய் யான், “இந்த செயற்கை மூளையானது மிகவும் மெல்லிய திசுக்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால் நியூரன்கள் வளர்ச்சியடைவதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் சீராக கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், என்னதான் செயற்கை மூளையின் பாகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒன்றோடு ஒன்று சிறப்பாக தொடர்பை செயல்படுத்திக்கொள்கின்றது என்றும் ஜாங் கூறியுள்ளார்.
நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள்
3D ப்ரிண்டிங் மூலம் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளையானது மனித மூளையைப்போலவே நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) மற்றும் மிர்ரரிங் இன்டராக்ஷன் (Mirroring Interactions) ஆகியவற்றினால் தகவலை பகிர்ந்துகொள்கின்றது என்று இந்த ஆர்ய்ச்சியில் கண்டறிப்பட்டுள்ளது.
எனவே, இந்த செயற்கை மூளை கொண்டு மூளையில் தகவல் பரிமாற்றத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் டவுன் சின்ட்ரோம் (Down syndrome) உள்ளவர்களது மூளையின் தகவல் பரிமாற்றம், அல்சைமர்ஸ் பாதிப்பு இருப்பவர்களது ஆரோக்கியமான செல்கள் மற்றும் பாடிக்கப்பட்ட மூளை செல்களுக்கு இடையில் ஏற்படும் தகவல் பரிமாற்றம், மூளையின் வளர்ச்சி என்று நரம்பியலின் பல்வேறு முக்கிய கூறுகளைப்பற்றி தெரிந்துகொண்டு பயனடையலாம். மூளை தொடர்பான நோய்களான அல்சைமர்ஸ், பார்கின்சன்ஸ் பாதிப்படைந்தவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரமாக இருக்கும் என்று அதனை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த 3D ப்ரிண்டிங் செய்வதற்கு பிரத்தியேக சிறப்பு கருவிகள் தேவைபடாது என்பதால் மூளையை பற்றி ஆரய்ச்சி செய்யும் நிறுவனங்கள் சுலபமாக மூளையின் மாதிரிகளை செய்த கொள்ள முடியும் என்றும் அராய்ச்சியாளர்கல் தெரிவித்துள்ளனர்.