இலங்கை
சுகாதார சேவைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!
இலங்கையில் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக இன்றைய தினம் (13.02.2024) அதி விசேட வரடத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியில் சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மருத்துவமனைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.