உலகச் செய்திகள்

கூகுள் நிறுவனம் மின்னஞ்சலுக்கு விதித்த புதிய கட்டுப்பாடு

கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள் வர இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூலம் மொத்தமாக 5,000 மின்னஞ்சல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.

யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Maps) போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், அடையாள அட்டை ,வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் மின்னஞ்சல் முக்கியமாக தேவைப்படுகிறது.

இதனால், மின்னஞ்சல் பயனர்களின் (Gmail Users) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் கூகுள் நிறுவனத்தால் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஸ்பேம் மின்னஞ்சல்களுக்கே (Spam Email) இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து மின்னஞ்சல் பயனர்களுக்கும் பொருந்தாது. ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5,000 மின்னஞ்சல்களை அனுப்பும் நபர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.

இந்த மொத்த அனுப்புநர்கள் (Bulk Senders)அவர்களிடமிருந்து மின்னஞ்சல்களை பெற விரும்பும் பயனர்களுக்கு மட்டுமே அவற்றை அனுப்ப வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த மின்னஞ்சல்கள் தானகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.

இதனால், தனிப்பட்ட பயனர்களுக்கு அவசியமில்லாமல், வரும் ஸ்பேம் மின்னஞ்சல்கள் படிப்படியாக குறைந்து விடும். முன்னதாக, ஸ்பேம் மின்னஞ்சல்கள் மீதான புகார்களின் அடிப்படையில் மட்டுமே, கூகுள் நிறுவனம் அவற்றின் மீது நடவடிக்கையை எடுத்து வந்தது.

ஆனால், இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் பயனர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஸ்பேம் மின்னஞ்சல்கள் தானாகவே நிராகரிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், வணிக மற்றும் விளம்பரங்களுக்காக மின்னஞ்சல்களை அனுப்புவோர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து அவர்களுக்கு நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் அனுப்பும், மின்னஞ்சல்களில் ஒன் – கிளிக் அன்சப்ஸ்கிரைப் பட்டன் (One-click Unsubscribe Button) இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த பட்டன் மின்னஞ்சலின் உடல் (Body)பக்கத்தில் பயனர்களுக்கு நன்றாக தெரியும்படி இடம்பெற வேண்டும்.

இந்த பட்டனை பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த அனுப்பநரிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களை விரும்பவில்லை என்றால், அன்சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஸ்பேம் மின்னஞ்சல்களும் பயனர்களுக்கு வராது.

இப்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் 2024ஆம் ஆண்டில் வர இருக்கின்றன. கூகுளின் இந்த ஜிமெயில் சேவையை 180 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது.

Back to top button