ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டிய நாள்: இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 14.02.2024, சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.28 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று மாலை 04.39 வரை ரேவதி. பின்பு அஸ்வினி. மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
விரயச் செலவுகள் அதிகரித்து அவஸ்தைப்படுவீர்கள். ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனையில் சிக்குவீர்கள். வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானம் அடைவீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். கிடைத்த லாபத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்வீர்கள். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலை இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தையும் சாதகமாக முடிப்பீர்கள்.

மிதுனம்
மிதுனம்
தொழிலில் இருந்த மந்தநிலையை விளக்கி பிரகாசத்தை ஏற்படுத்துவீர்கள். வங்கி லோன் கிடைத்து புதிய தொழில் தொடங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி கமிஷன் வியாபாரத்தில் கை நிறைய சம்பாதிப்பீர்கள். அதிக ஆசையால் சிலநேரங்களில் அவஸ்தையில் மாட்டிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் பெறுவீர்கள்.

கடகம்
கடகம்
குடும்பத்தில் சங்கடத்தை சந்தித்த நீங்கள் பிரச்சனை விலகி சந்தோஷம் அடைவீர்கள். வீட்டில் திருமண பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட கல்வி கடையை நீக்குவீர்கள். வெளியூரில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளாவீர்கள். மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். தேவையில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.

சிம்மம்
சிம்மம்
தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். ஆனால் அதிக லாபம் அடைய மாட்டீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள். ஊழியர்கள் வேலையில் அக்கறை காட்டி நடப்பீர்கள். அரசாங்க உதவிகள் சற்று தள்ளிப் போவதால் சங்கட்டப்படுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமாக இருக்காது. சந்திராஷ்டம நாள் என்பதால் மிகவும் கவனமாக செயல்படுங்கள்.

கன்னி
கன்னி
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பீர்கள். எதிர்பாராத தன லாபத்தை அடைவீர்கள். புதிய முதலீடுகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள். இருப்பதைக் கொண்டு வாழப முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி பெறுவீர்கள். வேலை இடங்களில் செல்வாக்கு பெறுவீர்கள். பெற்றோரின் மனமறிந்து நடப்பீர்கள்.

துலாம்
துலாம்
சிறுதொழில் செய்பவர்கள் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை அடைவீர்கள். தொந்தரவு தந்த கழுத்து வலி நீங்கி நிவாரணம் பெறுவீர்கள். பெரும் பொறுப்பில் இருப்பவர்களின் வெறுப்பால் செல்வாக்கு சேதம் அடைவீர்கள். முதலாளியின் கருத்துக்கு ஏற்ற வகையில் நடக்க இயலாமல் தடுமாறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்
தடைபட்டிருந்த வருமானங்கள் தாராளமாக வரத் தொடங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு நெருக்கடியைத் தந்த கடன்களை அடைப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள். திருமண வயதினர் மங்கல நிகழ்ச்சி கை கூடி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள் . பிள்ளைகள் தரும் பிரச்சனையால் மனைவியோடு சண்டை போடுவீர்கள்.

தனுசு
தனுசு
குழப்பமான சூழ்நிலைகள் விலகி நிலையான வருமானம் பெறுவீர்கள். பெற்றோர்கள் வழியில் சில நன்மை அடைவீர்கள். பிள்ளை குறித்த கவலை நீங்க நிம்மதி அடைவீர்கள். வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டியது இருந்தால் தள்ளிப் போட தயங்காதீர்கள். அவசியமில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள். சந்திராஷ்டமம். கவனம் தேவை.

மகரம்
மகரம்
சின்னச்சின்ன சங்கடங்களை சந்தித்தாலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை முடிப்பீர்கள். எதிர்ப்புகள் தந்த பிரச்சனையை சாதுரியத்தால் சமாளிப்பீர்கள். கெடுதல் செய்ய நினைத்தவர்கள் கெடுதல் அடைவார்கள். பூர்வீக சொத்து பற்றிய கவலையை மறந்து விடுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள்.

கும்பம்
கும்பம்
வியாபாரத்தில் இருந்த தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள். இயந்திர வகை தொழில்களில் ஈடுபாட்டை அதிகரிப்பீர்கள். எதையும் சிந்தித்து செயல்பட்டு சேதாரத்தை குறைப்பீர்கள். இடம் மாறுதல் அடைந்து வெளியூர் செல்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு தன்மையை அதிகரிப்பீர்கள். வெளி நாட்டிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள்.

மீனம்
மீனம்
நன்மைகளையும் தீமைகளையும் கலந்து சந்திப்பீர்கள். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார உயர்வு அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற மாட்டீர்கள். வேலையில் உங்களுடைய நேரடி கண்காணிப்பை செலுத்துவீர்கள். அரசு பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். அலட்சியமாக பேசி வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

Back to top button