உலகச் செய்திகள்

சிலியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (14.2.2024) காலை 7.01 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் அறிவித்துள்ளது.

சாண்டியாகோ நகரின் வடக்கே 524 கிலோமீட்டர் தூரத்தில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Back to top button