இலங்கை

புதிய அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20204.02.15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில், “விண்ணப்பங்களை விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஒன்லைன் முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலதிகமாக, பிரதேச செயலகங்களில் உள்ள சிறப்பு பிரிவுகளுக்கும் வழங்கலாம். ஒரு மாதத்திற்கு விண்ணப்பங்களை கோருவோம்.

முதல் சுற்றில், 20 லட்சம் விண்ணப்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும். இரண்டாம் சுற்றில் அதனை 24 லட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

அவர்களுக்கு ஜூலை மாதம் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மொத்தத்தில், இந்த ஆண்டு நலத்திட்டங்களுக்கு அரசாங்கம் 205 பில்லியன் ரூபாய் செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Back to top button