ஆஸ்திரேலியாஅமெரிக்காஐக்கிய இராச்சியம்கனடாபிரான்ஸ்ஜெர்மனி

G20 நாடுகள் கூட்டமைப்பு பற்றி தெரியுமா?

உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த சக்திவாய்ந்த 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள்.

இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் தான் ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. உலகின் மொத்த ஜிடிபியில், 85 சதவிகித ஜிடிபி இந்த 20 நாடுகளுக்குச் சொந்தமானதுஎன கணிக்கப்படுகிறது .

உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த 20 நாடுகளை சேர்ந்தவர்கள்தானாம்.

இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து G20 சந்திப்புகளை நடத்த வேண்டும்.

இந்த தலைவர் நாடு நினைத்தால் G20-ல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக் கூட விருந்தாளிகளாக அழைக்கலாம். உதாரணமாக எல்லா G20 மாநாட்டிலும் ஸ்பெயின் அழைக்கப்படுவதைச் சொல்லலாம்.

முதல் G20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த G20 மாநாடு ஒரு G8 நாடுகளின் விரிவாக்கம் என்று கூட சொல்லலாம்.

உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள், உலகின் வளரும் உயர் பொருளாதாரம் கொண்ட நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளையும் சேர்த்து உருவாக்கியது தான் இந்த G20.

இந்த G20 மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் தான் சந்தித்தார்கள். ஆனால் 2008 பொருளாதார சரிவுக்குப் பின் G20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என அனைவரும் சேர்ந்து சந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

G20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்களைப் பேசுவார்களாம். அதோடு உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் கேட்பார்களாம்.

சரி இவ்வளவு சிறப்பு கொண்ட அந்த 20 நாடுகளும் எவை?

இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ் , ஜெர்மனி , இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, ஆர்ஜன்டீனா ,சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளாகும்.

Back to top button