ஆசியாஇந்தியாஉலகச் செய்திகள்

பயங்கரவாதத்தை முற்றிலுமாக எதிர்க்கும் மோடி

பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதை தடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா : சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை சுழற்சி முறையில் தற்போது ஏற்றுள்ளது.

காணொளி வாயிலாக இந்த அமைப்பின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சர்வதேச அளவில் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை சமாளிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியமானது என கூறினார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் சில நாடுகள் தங்கள் கொள்கையை நடைமுறைப்படுத்தும் கருவிகளாக பயன்படுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு கூடாது என்றும் தெரிவித்தார்.

Back to top button