சுவிட்சர்லாந்து

நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து உக்ரைன் போரால் எடுத்துள்ள அதிரடி முடிவு – வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு!

பல நாடுகளின் பதுகாப்பு தொடர்பான எண்ணங்களில் உக்ரைன் போர், பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விடயம் ஏற்படுத்திய பயத்தால் சில நாடுகள் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியையே துவக்கிவிட்டன. இந்நிலையில், இதுவரை நடுநிலை நாடு என்ற பெயரை தக்கவைத்துக்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து, நாட்டின் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. ஆம், நடுநிலை நாடுகளான சுவிட்சர்லாந்தும், ஆஸ்திரியாவும், ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பான Sky Shield என்னும் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவிக்கும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் துவக்கியதைத் தொடர்ந்து ஜேர்மனி துவக்கிய இந்த அமைப்பு, ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஆயுதங்கள் வாங்கவும், இராணுவ பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுவிஸ் நாட்டவர்கள் சிலர், குறிப்பாக, வலது சாரிக் கட்சியினர், தங்கள் நாட்டின் நீண்ட கால நடுநிலைமைத் தன்மையை இந்த விடயம் விட்டுக்கொடுப்பதுபோல் அமைந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள்.

Back to top button