இனி வீட்டிலே சோன் பப்டி செய்யலாம்: ரெசிபி இதோ
பொதுவாகவே அனைவருக்கும் இனிப்பு என்றாலே பிடிக்கும். அதிலும் சோன் பப்டி பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ?
சோன் பப்டி என்றாலே அனைவரும் கடைகளிலும் தெருவிலும் வாங்கி தான் சாப்பிடுவோம். சோன் பப்டி மிகவும் இனிப்பு சுவைக்கொண்ட ஒரு பலகார வகையாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே கடைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே எப்படி சுவையான சோன் பப்டி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள் –
கடலை மாவு – 1 1/2 கப்
மைதா – 1 1/2 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
நெய் – 250 கிராம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய், கடலை மாபோட்டு, அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் மைதா மாவை சேர்த்து அதையும் நன்கு கலந்து விடவும்.
தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு,அதை சுமார் 10 நிமிடம் வரை வதக்கவும்.
மாவானது நன்றாக உருகி வரும் நிலையில் உப்பு, எலுமிச்சை சாற்றை சேர்த்து,நன்றாக கலந்து, அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரை கப் அளவிற்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாகு பதத்தில் வரும் பொழுது ஒரு தட்டில் வெண்ணெய் சேர்த்து சர்க்கரை பாகை அதில் ஊற்றி, இரண்டு நீளமான கரண்டியின் முனைகளைக் கொண்டு நன்றாக அந்தப் பாகை இழுத்து விடவும்.
இதை செய்துக்கொண்டு கலந்து வைத்திருக்கின்ற கடலை பயிறு மற்றும் மைதா மாவையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும், பாதாம்,பிஸ்தா, முந்திரி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து இழுத்து விடவும்.
இதை எவ்வளவு நேரம் செய்கின்றமோ அந்தளவிற்கு மிருதுவாகவும், தூள் தூளாகவும் சோன் பப்டி கிடைக்கும்.