ஏனையவை

இலங்கை ஸ்டைலில் வாழைக்காய் சம்பல்!

பொதுவாகவே தென்னிந்திய குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்களது தினசரி உணவில் அசைவத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணம் காய்கறிகளின் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துகளாகும். ஆகவே காலை உணவு முதல் இரவு உணவு வரை காய்கறிகளை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்த ஒரு பழக்கமாக இருகின்றது.

காய்கறிகள் நிறைய வகைகளில் இருந்தாலும் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காயாக வாழைக்காய் இருக்கிறது. ஆகவே தினமும் வாழைக்காய் வைத்து வழமைப் போல் சமைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமான இலங்கை ஸ்டைலில் சம்பல் செய்து சாப்பிட்டு பார்க்கலாம். அதற்கு முதலில் என்ன பொருட்கள் வேண்டும் மற்றும் செய்முறை என்ன என்று விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

2 வாழைக்காய்

1/2 பெரிய வெங்காயம் அல்லது 10 சின்ன வெங்காயம்

2-3 பச்சைமிளகாய்

கருவேப்பிலை சிறிதளவு

5 மேசைக்கரண்டி தேங்காய் முதல் பால்

உப்பு தூள் தேவையான அளவு

1 மேசைகரண்டி எலுமிச்சைச்சாறு


செய்முறை

வாழைக்காயை தோலை நீக்காமல் தண்ணீரில் உப்பு சேர்த்து நன்றாக அவித்து எடுக்கவும்.

அவிந்த வாழைக்காயை ஆறவிட்டு தோலை அகற்றி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின் வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, தேங்காய்ப்பால், எலுமிச்சை சேர்த்து கைகளில் பிசைந்துக்கொள்ளவும்.

இவ்வாறு செய்து எடுத்தால் சுவையான வாழைக்காய் சம்பல் ரெடி!

Back to top button