சுவிட்சர்லாந்து

இஸ்ரேலில் உள்ள சுவிஸ் குடிமக்களை திரும்ப அழைத்துவரும் திட்டம் திடீர் ரத்து

இஸ்ரேலில் இருக்கும் சுவிஸ் குடிமக்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவரும் திட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் விமான நிறுவனமான SWISS, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 200க்கும் அதிகமான சுவிஸ் நாட்டவர்களை இஸ்ரேலிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அழைத்துவந்தது.

வெள்ளியன்று கடைசி விமானம் புறப்பட்டநிலையில், இஸ்ரேலிலிருந்து சுவிஸ் நாட்டவர்களை அழைத்துவரும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று இரண்டு விமானங்கள் இஸ்ரேல் சென்று சுவிஸ் குடிமக்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவர இருந்த நிலையில், அவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரணம் என்ன?
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இஸ்ரேல் சென்று சுவிஸ் குடிமக்களை அழைத்துவரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, இஸ்ரேல், காசாவில் வாழும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற 24 மணி நேர கெடு விதித்திருந்தது. அந்த கெடு இன்று காலையுடன் முடிவடைகிறது. அதற்குப் பின் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதால் வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியிருக்கும் சூழலில், இப்போதைக்கு இஸ்ரேலிலிருக்கும் சுவிஸ் மக்களை திருப்பி அழைத்துவர விமானங்கள் அனுப்புவது சரியாக இருக்காது என்பதாலேயே, சுவிஸ் மக்களை திருப்பி அழைத்துவரும் திட்டம் தற்காலிகமான ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Back to top button