உடல்நலம்

வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா ; உடலின் வெப்பநிலையை குறைக்கும் சியா விதைகள்

இன்றைய நாளை பொருத்த வரையில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு நம் உடலை நாம் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். உடலின் வெப்பநிலையை குறைப்பதற்காகவே சியா விதைகள் காணப்படுகின்றது.

வெப்பம் கண்டிப்பாக அதிகரிக்கத்தான் செய்யும். இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை கண்டிப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் நார்ச்சத்தும் உள்ளது. இதை சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

எடையை கட்டுப்படுத்த உதவும்
இது புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கிறது. இது உடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சியா விதைகளை சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது பசி மற்றும் தாகத்தை அதிகரிக்காது.

இதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கலாம். டயட்டில் இருக்கும் போது மில்க் ஷேக்கில் போட்டு குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் நார்ச்சத்தும் உள்ளது. இதை சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் எலும்புகளுக்கு நல்லது.

சியா விதைகளின் பக்க விளைவுகள்
சியா விதைகளை அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை ஏற்படும். குடல் பிரச்சனைகள் ஏற்படும்.

சியா விதைகள் மட்டுமல்ல, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும்போதும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

சியா விதைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவது அரிதானது என்றாலும், அதுவும் சாத்தியமாகும். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

இந்த கொட்டைகளை வேறு சில உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கலாம், எனவே கவனமாக இருங்கள்.

Back to top button