இலங்கை

யாழ்ப்பாண நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை திருடியவர் கைது

யாழ்ப்பாணம் நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் திருடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(01.02.2024) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் அவர்களின் வழிகாட்டுதலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான அணியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து திருடப்பட்ட 23 லட்சம் ரூபா பெறுமதியான 13 பவுண் நகையினையும் 2 லட்சம் ரூபாய் பணத்தினையும் மீட்டுள்ளனர்.

கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Back to top button