கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் பதிவாகிய வீழ்ச்சி
கனடாவில் கடந்த ஐந்தாவது காலாண்டாக தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் அறியத்தருகையில், “கடந்த 2022ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருகிறது. அண்மைய ஆண்டுகளாகவே தொழில் வாய்ப்பு வெற்றிடங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எவ்வாறெனினும் தொழில் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.”என குறிப்பிட்டுள்ளது.
மணித்தியால சம்பளம்
அத்துடன், கடந்த இரண்டாம் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது, மணித்தியால சம்பளம் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.