சுவிஸ் மாகாணமொன்றில் பெரும் பணக்காரர்களுக்கு வரியை கூடுதலாக விதிக்க திட்டம்!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம் இந்த மாத இறுதியில் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு தற்காலிக வரி ஒன்றை விதிப்பது தொடர்பில், வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளது. அதாவது, 3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அதிகமான பணம் வைத்திருப்பவர்கள், அந்த கூடுதல் தொகையில் ஒரு மில்லியனுக்கு 2,500 சுவிஸ் ஃப்ராங்குகள் வீதம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு கூடுதல் வரி செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படி வரி வசூலித்தால், ஜெனீவா மாகாணத்துக்கு 200 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் கூடுதலாக கிடைக்கும் என்கிறார்கள் வங்கியாளர்கள்.
இருப்பினும், அப்படி பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதித்தால், அவர்கள் ஜெனீவாவைவிட்டு வெளியேறி வேறு மாகாணங்களுக்குச் சென்றுவிடக்கூடும் என்கிறார்கள் சிலர். மற்ற மாகாணங்களில் இதைவிட சிறந்த வரி வீதங்கள் உள்ளன என்கிறார்கள் மாற்றுக் கருத்து கொண்டவர்கள்.
இருந்த போதிலும், மிகப்பெரிய பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பில், இந்த மாத இறுதியில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.